Home இந்தியா விரைவில் பணிக்கு திரும்புவேன் – மருத்துவமனையில் இருந்து பிரணாப் முகர்ஜி தகவல்!

விரைவில் பணிக்கு திரும்புவேன் – மருத்துவமனையில் இருந்து பிரணாப் முகர்ஜி தகவல்!

698
0
SHARE
Ad

peranap mugarjiபுதுடெல்லி, டிசம்பர் 15 – தான் உடல்நலம் தேறி வருவதாகவும், விரைவில் பணிக்குத் திரும்புவேன் என்றும், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு சனிக்கிழமை காலை மார்புப் பகுதியில் திடீரென வலி ஏற்பட்டது.

உடனே அவர், டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ஆஞ்சியோகிராம் உள்ளிட்ட இருதய மருத்துவப் பரிசோதனைகள் செய்ததில், அவரது இருதய ரத்த நாளத்தில் அடைப்பு இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து, பிரணாபுக்கு ஆஞ்சியோபிளாஸ்ட்டி சிகிச்சை மூலம் அடைப்பு நீக்கப்பட்டது. தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வரும் குடியரசுத் தலைவர் ஞாயிற்றுக்கிழமை தமது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட செய்தியில்,

#TamilSchoolmychoice

“நான் உடல்நலம் பெற பிரார்த்தனை செய்வோருக்கும், வாழ்த்துவோருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான் உடல்நலம் தேறி வருகிறேன். விரைவில் வழக்கமான பணிக்குத் திரும்புவேன்’ என்று பிரணாப் தெரிவித்துள்ளார்.