Home உலகம் சிட்னி தங்குவிடுதியில் தீவிரவாதி ஒருவரால் 13 பேர் சிறைபிடிப்பு!

சிட்னி தங்குவிடுதியில் தீவிரவாதி ஒருவரால் 13 பேர் சிறைபிடிப்பு!

1116
0
SHARE
Ad

சிட்னி, டிசம்பர் 15 – ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில், தங்கும் விடுதி ஒன்றில் நுழைந்த தீவிரவாதி ஒருவர் அங்கிருந்த 13 பேரை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளார். இதனால் அங்கு மிகவும் பரபரப்பான சூழல் நிலவுகின்றது.

தங்குவிடுதிக்கு வெளியே கடும் பாதுகாப்பில் ஆஸ்திரேலிய காவல்துறை

அந்த தங்கும்விடுதி அமைந்துள்ள மார்டின் ப்ளேஸ் பகுதியில் தற்போது பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ள காவல்துறை, அங்கிருக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வருகின்றனர். மேலும் பொதுமக்கள் யாரும் மார்டின் ப்ளேஸ் பகுதிக்கு செல்ல வேண்டாம் என சமூக வலைதளங்கள் மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பிணைக் கைதிகளை தொடர்பு கொள்ளும் முயற்சியில் காவல்துறை ஈடுபட்டு வருகின்றது.

இந்த செயலுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகின்றது. காரணம் தங்கும் விடுதியில் கதவுகளில் இஸ்லாமிக் ஸ்டேட் அமைப்பின் கொடி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

#TamilSchoolmychoice

இது குறித்து ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அபோட் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த சம்பவம் குறித்து யாரும் அச்சமடைய வேண்டும். தீவிரவாதியின் நோக்கம் என்னவென்று இதுவரை தெரியவில்லை. பிணைக்கைதிகளை மீட்க தக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது” என்று தெரிவித்துள்ளார்.