Home இந்தியா மீத்தேன் திட்டத்தை செயல்படுத்தினால் விவசாயிகளை திரட்டி போராடுவேன் – வைகோ

மீத்தேன் திட்டத்தை செயல்படுத்தினால் விவசாயிகளை திரட்டி போராடுவேன் – வைகோ

587
0
SHARE
Ad

vaiko newsஒரத்தநாடு, டிசம்பர் 15 – காவிரியின் குறுக்கே 2 அணைகளை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கும் மீத்தேன் எரிவாயு திட்டத்தை தடுத்து நிறுத்தக்கோரியும், பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தியும் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தஞ்சை மாவட்டத்தில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக ஒரத்தநாடு மற்றும் திருவோணம் பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வைகோ நேற்று நேரில் சென்று பிரச்சாரம் செய்தார். அப்போது பாப்பாநாட்டில் கூடியிருந்த மக்களிடம் வைகோ பேசியதாவது:-

“தமிழகத்தில் உள்ள சுமார் 3 கோடி மக்களுக்கு பயன்படக்கூடிய காவிரி அணைக்கு பிரச்சனையாக கர்நாடக அரசு செயல்படுகிறது. காவிரி அணையின் குறுக்கே 2 தடுப்பணைகளை கட்ட முயற்சிக்கிறது. இதற்கு மத்திய அரசின் தடையில்லா சான்று கிடைக்கும் என்றும் சொல்கிறது”.

#TamilSchoolmychoice

“இதுமட்டும் அல்லாது அங்கு மேலும் 4 தடுப்பணைகளை அமைப்பதற்கு கர்நாடக அரசு திட்டமிட்டு வருகிறது. தமிழகத்தின் உயிரோட்டமுள்ள பூமி காவிரி டெல்டா பகுதியாகும். இந்த பகுதியில் வறட்சி ஏற்பட்டால் தமிழகமே இருக்காது. இந்த பிரச்சனையில் தமிழக அரசு சரியான முறையை பின்பற்றி வருகிறது”.

“ஆனால் மத்திய அரசை தலைமையேற்று நடத்தும் பிரதமர் நரேந்திரமோடியின் செயல்பாடு சரியாக இல்லை. எனவே இவ்விஷயத்தில் தமிழகத்தின் நலனை காக்க மத்திய அரசை நிர்ப்பந்தித்து போராட்டம் நடத்த வேண்டிய காலம் வந்துவிட்டது”.

“மேலும் காவிரி டெல்டா பகுதியை பாலைவானமாக்கும் மீத்தேன் எரிவாயு திட்டத்தை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்யவேண்டும். விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக எந்த எந்திரம் இங்கு கொண்டுவந்தாலும் எந்திரங்களை அடித்து நொறுக்குவோம்”.

“இத்திட்டத்தை எதிர்த்து நானே விவசாயிகளுடன் களத்தில் இறங்கி போராடுவேன். மேலும், மதுவால் இளைஞர்கள் சீரழிந்து வருகிறார்கள். இதனால் பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த அனைவரும் போராட தயாராக இருக்க வேண்டும்” என வைகோ பேசினார்.