Home கலை உலகம் பாலச்சந்தர் நலமாக உள்ளார், என்னைப் பார்த்து சிரித்தார் – ரஜினி

பாலச்சந்தர் நலமாக உள்ளார், என்னைப் பார்த்து சிரித்தார் – ரஜினி

487
0
SHARE
Ad

rajini-speechசென்னை, டிசம்பர் 16 – இயக்குநர் கே.பாலச்சந்தர் நலமுடன் இருப்பதாகவும் தன்னைப் பார்த்து சிரித்ததாகவும் அவரை நேரில் சந்தித்த ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

100 படங்களை இயக்கியவரும், ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரை அறிமுகப்படுத்தியவருமான கே.பாலச்சந்தர் இன்று மிகவும் கவலைக்கிடமான நிலையில் சென்னை காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அவர் உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வந்தவண்ணம் இருந்தன. இதற்கிடையில் பாலச்சந்தர் உடல்நிலை குறித்து ரஜினிகாந்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அவர் காவேரி மருத்துவமனைக்கு விரைந்தார்.

#TamilSchoolmychoice

அவசர சிகிச்சை பிரிவில் இருந்த பாலச்சந்தரை அவர் பார்த்தார். சில நிமிடங்களுக்குப் பிறகு வெளியில் வந்த ரஜினி, செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறுகையில்,

“இயக்குநர் கே.பாலச்சந்தரை நான் பார்த்தேன். அவர் நலமுடன் இருக்கிறார். என்னைப் பார்த்துச் சிரித்தார். அவருக்கு ஒன்றும் ஆகாது. அவர் விரைவில் குணமடைந்து வர ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்,” என்றார் ரஜினி.