Home நாடு (நேரடி செய்தி) மத்திய செயலவையில் கலந்து கொள்ள இரண்டு தரப்புக்கும் அனுமதி

(நேரடி செய்தி) மத்திய செயலவையில் கலந்து கொள்ள இரண்டு தரப்புக்கும் அனுமதி

520
0
SHARE
Ad

கோலாலம்பூர், டிசம்பர் 18 (பிற்பகல் 3.45) – தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் மஇகா மத்திய செயலவையின் கூட்டத்தில் கலந்து கொள்ள இரண்டு தரப்பினருக்கும் – அதாவது 2009ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய செயலவையினர் – சங்கப் பதிவகத்தால் செல்லாது என அறிவிக்கப்பட்ட 2013ஆம் ஆண்டின் தேர்தலின் வழி தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய செயலவையினர் – என இரண்டு தரப்பினருக்கும் மஇகா தேசியத் தலைவர் அனுமதி வழங்கியுள்ளார்.

FRU IN MIC HQ DEC 18 -1

தற்போது மத்திய செயலவைக் கூட்டம் காரசாரமாக நடைபெற்று வரும் வேளையில் மஇகா தலைமையகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுமியுள்ளனர்.

#TamilSchoolmychoice

காவல் துறையின் கலகத் தடுப்பு பிரிவினரும் (FRU Police) மஇகா தலைமையகத்திற்கு வெளியே குவிக்கப்பட்டுள்ளனர்.

FRU in MIC HQ Dec 18 -