Home இந்தியா சென்னை செல்கிறார் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா!

சென்னை செல்கிறார் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா!

859
0
SHARE
Ad

amit-shahசென்னை, டிசம்பர் 20 – பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, இரண்டு நாள் பயணமாக இன்று (சனிக்கிழமை) தமிழகம் செல்கிறார். கட்சி நிர்வாகிகளுடன் நாளை ஆலோசனை நடத்துகிறார்.

சட்டசபை தேர்தல் குறித்து வியூகம் அமைப்பது உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகள் இந்த ஆலோசனையில் விவாதிக்கப்படும் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சென்னையை அடுத்த மறைமலைநகரில் இன்று மாலை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அமித் ஷா கலந்துகொண்டு பேசுகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

#TamilSchoolmychoice

 

Comments