Home வணிகம்/தொழில் நுட்பம் சுற்றுச்சூழல் மாசுபாட்டினால் 2050-ல் உணவு உற்பத்தி 18 சதவிகிதம் குறைக்கும் – ஆய்வாளர்கள் தகவல்!

சுற்றுச்சூழல் மாசுபாட்டினால் 2050-ல் உணவு உற்பத்தி 18 சதவிகிதம் குறைக்கும் – ஆய்வாளர்கள் தகவல்!

1531
0
SHARE
Ad

p624_0ரோம், டிசம்பர் 20 – பருவநிலை மாறுபாட்டினால் எதிர்வரும் 2050-ம் ஆண்டிற்குள் உணவு உற்பத்தி 18 சதவிகிதமாகக் குறையும் என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

எதிர்வர இருக்கும் ஆபத்தினை உணர்ந்து, உலக நாடுகள் தேவையான மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும்  கூறியுள்ளனர்.

இது தொடர்பாக சுற்றுச்சூழல் ஆராய்ச்சிகளை செய்து வரும் டேவிட் லெக்கிளாரி மற்றும் மைக்கேல் ஓபர்ஸ்டீனர் உலக சுற்றுச்சூழல் குறித்த ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அதில் கூறியிருப்பதாவது:-

#TamilSchoolmychoice

“உலக நாடுகள் ஏற்படுத்திய சுற்றுச்சூழல் மாசு காரணமாக, பருவநிலையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பல இடங்களில் பருவ மழை பொய்த்துவிட்டது.

மற்ற இடங்களில் காலம் தவறி மழை பெய்து வருகிறது. இதனால் உணவு உற்பத்தி கடுமையான அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. உலகில் தொழிற்சாலைகள் பெருகி, காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன.”

global-warmingஇதனால் உயிர்கள் சுவாசிப்பதற்கு தேவையான ஆக்சிஜனின் அளவு குறைந்துவிட்டது. உலக நாடுகளின் பருவநிலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம், அனைத்து நீர்நிலைகளும் தொடர்கிறது.

இதைத் தடுப்பதற்கு, அந்தந்த நாடுகள் நீர்ப்பாசனத்திற்கும், சேமிப்பிற்கும் தேவையான அனைத்து கட்டமைப்பு வசதிகளையும் 25 சதவிகிதத்துக்கும் மேலாக மேற்கொள்ள வேண்டும்.

தகுந்த காலத்திற்குள் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்றால், 2050-ம் ஆண்டிற்குள் உலகம், 18 சதவிகிதத்துக்கும் அதிகமான உணவு உற்பத்தி குறையும்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.