Home இந்தியா நெப்போலியனுக்கு நான் ஆசி வழங்கவில்லை – மு.க. அழகிரி மறுப்பு!

நெப்போலியனுக்கு நான் ஆசி வழங்கவில்லை – மு.க. அழகிரி மறுப்பு!

603
0
SHARE
Ad

napoleon-tamil-actor-02சென்னை, டிசம்பர் 23 – தி.மு.க.வில் இருந்து விலகி மாற்றுக்கட்சியில் சேருங்கள் என்று நான் யாரையும் சொல்லவில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சர் நடிகர் நெப்போலியன் சென்னையில் பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவர் அமித்ஷாவை சனிக்கிழமையன்று சந்தித்து அக்கட்சியில் இணைந்தார் நெப்போலியன்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நெப்போலியன், “தி.மு.க.வில் உட்கட்சி ஜனநாயகம் இல்லாததால் மு.க.அழகிரியின் ஆசியோடுதான் பாஜகவில் இணைந்தேன் என கூறியுள்ளார். மேலும் அவர் அழகிரி மன உளைச்சலில் இருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.

#TamilSchoolmychoice

இந்த கருத்துக்கு, மறுப்பு தெரிவித்த அழகிரி செய்தியாளர்களிடம் கூறியதாவது, “பாஜகவில் சேர்ந்துள்ள நடிகர் நெப்போலியன் எனது ஆசியோடுதான் அந்த கட்சியில் சேர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார்”.

“அதுபோல ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ரித்தீசும் அ.தி.மு.க.வில் சேர்ந்த போது இதே கருத்தை தெரிவித்தார். நான் யாரையும் தி.மு.க.வில் இருந்து விலகி வேறு கட்சியில் சேருங்கள் என்று சொல்லவில்லை. சொல்லவும் மாட்டேன்”.

“தி.மு.க.வின் வளர்ச்சிக்காக சில கருத்துக்களை தெரிவிக்கின்றேனே தவிர, தி.மு.க.வுக்கு எதிராக எந்த காலக்கட்டத்திலும் செயல்படமாட்டேன்” என பேட்டியளித்துள்ளார் அழகிரி.