Home நாடு மஇகா: பிரகாஷ் ராவின் பொறுப்பற்ற புகார் – சிவராஜா குற்றச்சாட்டு

மஇகா: பிரகாஷ் ராவின் பொறுப்பற்ற புகார் – சிவராஜா குற்றச்சாட்டு

611
0
SHARE
Ad

கோலாலம்பூர், டிசம்பர் 25 – மஇகா தலைமையகத்தில் கடந்த வாரம் வியாழக்கிழமை (டிசம்பர் 18) நடைபெற்ற ஆர்ப்பாட்ட சம்பவம் தொடர்பில் மஇகா பொதுச் செயலாளர் பிரகாஷ் ராவ், இளைஞரணி மீது காவல்துறையில் தவறாக புகார் அளித்துள்ளதாக இளைஞரணி தலைவர் சிவராஜா கூறியுள்ளார்.

tmi-sivarraajh-nov26_300_274_100
சிவராஜா

மஇகா தலைமையகத்தில் அன்றைய தினம் கூடியிருந்த இளைஞரணியைச் சேர்ந்த சிலர், அங்கு அமைதியை நிலைநாட்டவும் மோதலை தடுப்பதற்காகவுமே வந்திருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

“ஆனால் அத்தகையவர்களை மோதலில் ஈடுபட்டதாக பிரகாஷ் ராவ் புகார் அளித்துள்ளார். இளைஞரணியின் செயல்பாட்டுக்காக பாராட்டு தெரிவிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நாங்கள் குற்றம் சாட்டப்பட்டு இருக்கிறோம். இது நியாயமா?” என சிவராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

#TamilSchoolmychoice

பிரகாஷ் ராவ் பொறுப்பற்ற முறையில் புகார் அளித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், மஇகாவில் தற்போது நிலவும் பதற்றத்தை பிரகாஷ் ராவ் மேலும் அதிகப்படுத்தி உள்ளதாக விமர்சித்துள்ளார்.

A-Prakash-Rao1
ஏ.பிரகாஷ் ராவ்

“மறுதேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற சங்கப் பதிவதிகாரியின் உத்தரவு தொடர்பில் மத்திய செயலவைக்கும் கட்சித் தலைமைக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது. இந்நிலையில் இரு தரப்புக்கும் இடையே சமாதான பாலமாக மஇகா இளைஞரணிதான் செயல்படுகிறது” என்றும் சிவராஜா சுட்டிக் காட்டியுள்ளார்.

“கருத்து வேறுபாடுகளை புறந்தள்ளிவிட்டு அனைத்து தரப்பும் தற்போது நிலவும் பிரச்சினைக்கு நல்ல தீர்வை காண வேண்டும் என்பதே இளைஞரணியின் விருப்பம். இல்லையெனில் அடுத்த 3 ஆண்டுகளில் நாம் எதிர்கொள்ளப் போகும்  பொதுத்தேர்தலில் பிரச்சினைகளை எதிர்கொள்வோம். மஇகா எதிர்கொண்டுள்ள சவாலை சமாளிக்க நாம் தயாராக வேண்டும். எதிர்காலம் என்பது இளைஞர்களின் கையில் உள்ளது. இன்றைய இளைஞர்களே நாளைய தலைவர்கள்,” என்று சிவராஜா மேலும் கூறியுள்ளார்.