Home வணிகம்/தொழில் நுட்பம் பணியாளர்களின் நிலுவைத் தொகைகளை திருப்பிக் கொடுத்தது ஸ்பைஸ் ஜெட்!

பணியாளர்களின் நிலுவைத் தொகைகளை திருப்பிக் கொடுத்தது ஸ்பைஸ் ஜெட்!

443
0
SHARE
Ad

புது டெல்லிடிசம்பர் 29 – கடும் பொருளாதார சிக்கலில் இருந்து வரும் கலாநிதி மாறனின் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம், தொழிலாளர்கள் மற்றும் எரிபொருள் நிறுவனங்களின் நிலுவைத் தொகைகளை திருப்பிக் கொடுத்துள்ளதாக அறிவித்துள்ளது.

SpiceJet,

கடந்த சில நாட்களுக்கு முன்னர்விமான போக்குவரத்து இயக்குநரகம் (DGCA), பொருளாதார இழப்புகள் மற்றும் தொடர்ச்சியான விமானப் பயணங்கள் ரத்து போன்ற காரணங்களால் ஸ்பைஸ் ஜெட்டின் 186 வழித்தடங்களை ரத்து செய்தது. மேலும்எண்ணெய் நிறுவனங்களும் நிலுவையில் உள்ள தொகையை செலுத்திவிட்டு விமானங்களை இயங்குவதற்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்ளுமாறு ஸ்பைஸ் ஜெட்டிற்கு தெரிவித்திருந்தன. இதன் காரணமாக சுமார் 1800 விமான சேவைகள் வரை ரத்து செய்யும் நிலை ஏற்பட்டது.

#TamilSchoolmychoice

இந்நிலையில் நிலுவைத் தொகைகள் அனைத்தும்  செலுத்தப்பட்டுள்ளதாக  அந்நிறுவனத்தின் தலைமை இயக்க அதிகாரி சஞ்சீவ் கபூர் கூறுயுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

கடந்த நவம்பர் மாதம் ஊழியர்களுக்கும் எரிபொருள் நிறுவனங்களுக்கும் நிலுவையில் உள்ள தொகைகள் அனைத்தும் செலுத்தப்பட்டுள்ளது.” என்று கூறியுள்ளார்.

இதற்கிடையில்ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தை மீட்க 200 மில்லியன் டாலர்கள் வரை முதலீடு செய்ய பௌண்டிங்க் ப்ரோமொடர்ஸ்‘ (Founding Promoters) –ன் அஜய் சிங் மற்றும் அமெரிக்க நிறுவனமான ஜெபி மோர்கன் (JP Morgan) முயன்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.