Home கலை உலகம் அமிதாப்பச்சனுக்கு நாகேஸ்வரராவ் விருது – சந்திரசேகரராவ் வழங்கினார்!

அமிதாப்பச்சனுக்கு நாகேஸ்வரராவ் விருது – சந்திரசேகரராவ் வழங்கினார்!

662
0
SHARE
Ad

amithaapஐதராபாத், டிசம்பர் 29 – ஐதராபாத்தில் பிரபல தெலுங்கு நடிகர் நாகேஸ்வரராவ் பெயரிலான விருது வழங்கும் விழா நடந்தது. ‘அக்கினேனி இன்டர்நேசனல் பவுண்டேசன்’ சார்பில் நடந்த இந்த விழாவில் நடிகர் நாகேஸ்வரராவின் மகன் நடிகர் நாகார்ஜூனா, அவரது மனைவி அமலா, மகன்களும், நடிகர்களுமான நாகசைதன்யா, அகில் உள்பட குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் பிரபல இந்தி நடிகர் அமிதாப்பச்சன் கலந்து கொண்டார். அவருக்கு நாகேஸ்வரராவ் விருது வழங்கப்பட்டது. தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் இவ்விருதை வழங்கினார். விழாவில் அமிதாப்பச்சன் பேசும்போது, ‘‘இந்த விருதை பெறுவதன் மூலம் நான் பெருமை அடைகிறேன்’’ என்றார்.

பின்னர் அவர் முதல்வர் சந்திரசேகரராவை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினார். இருவரும் 30 நிமிடம் பேசிக்கொண்டு இருந்தனர். தெலுங்கானா மாநிலம் உருவாக சந்திரசேகர ராவ் எடுத்துக்கொண்ட முயற்சியை அமித்தாப்பச்சன் பாராட்டினார்.

#TamilSchoolmychoice

மேலும் தெலுங்கானா முதல்வராக பதவி ஏற்றதையொட்டி அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். ஐதராபாத் நகரம் உலகத்தரமிக்க நகரமாக மாறவும், மாநில வளர்ச்சிக்கு தேவையான உதவிகளை செய்யவும் தயார் என்று சந்திரசேகரராவிடம் அமிதாப் உறுதி அளித்தார்.

ஐதராபாத் புறநகரில் 2 ஆயிரம் ஏக்கரில் ஹாலிவுட் தரத்துக்கு இணையாக பிரமாண்ட திரைப்பட நகரம் உருவாக்கப்பட உள்ளது. இதற்கு தேவையான உதவிகளை செய்யுமாறு அமிதாப்பிடம் சந்திரசேகர ராவ் கேட்டுக் கொண்டார்.