Home உலகம் அனைத்துலக விசாரணைக்கு இலங்கை ஒத்துழைக்க வேண்டும்: பான் கி மூன் வலியுறுத்தல்!

அனைத்துலக விசாரணைக்கு இலங்கை ஒத்துழைக்க வேண்டும்: பான் கி மூன் வலியுறுத்தல்!

552
0
SHARE
Ad

Ban Ki-moonகொழும்பு, டிசம்பர் 27 – இலங்கை அரசு, விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடத்திய போரில் பல்வேறு மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகின்றன. இந்த விவாகாரத்தில், போர்க் குற்றங்கள் குறித்த அனைத்துலக விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு இலங்கை அரசை, ஐ.நா. பொது செயலாளர்  பான் கி மூன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக பான் கி மூனின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீஃபன் துஜாரிக் கூறியதாவது::-

“போருக்குப் பிந்தைய வாக்குறுதிகளையும், செயல் திட்டங்களையும் நிறைவேற்றுவதில் இலங்கை அரசு முனைப்பு காட்ட வேண்டும் என்பதை பான் கி மூன் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.”

#TamilSchoolmychoice

“மேலும், இறுதிக் கட்டப் போரின்போது நடைபெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் குறித்து நடுநிலையான விசாரணை மேற்கொள்வதற்கான ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் அழைப்பை ஏற்று, அனைத்துலக விசாரணைக்கு இலங்கை அரசு ஒத்துழைக்க வேண்டும் என்பதும் அவரது கோரிக்கையாக உள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.