Home இந்தியா பெங்களூர் குண்டுவெடிப்பில் தமிழக பெண் பலி!

பெங்களூர் குண்டுவெடிப்பில் தமிழக பெண் பலி!

522
0
SHARE
Ad

bangaloreபெங்களூர், டிசம்பர் 29 – பெங்களூர் குண்டுவெடிப்பில் தமிழகத்தைச் சேர்ந்த பெண் பலியாகியுள்ளார். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தனியார் உணவு விடுதி அருகே நேற்று இரவு 8.30 மணியளவில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் பவானி என்ற தமிழகத்தைச் சேர்ந்த பெண் பலியானார்.

மேலும் கார்த்திக் என்பவர் படுகாயமடைந்துள்ளார். இந்த சம்பவத்தை அடுத்து பெங்களூரூ நகர காவல்துறை ஆணையர் சம்பவ இடத்தை ஆய்வு செய்தார்.

இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் குண்டுவெடிப்புக்குக் காரணமான மர்ம நபர்கள் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

#TamilSchoolmychoice

மேலும் வெடித்த குண்டு, குறைந்த சக்தி வாய்ந்த குண்டு’ என்று, பெங்களூரு நகர காவல்துறை ஆணையர் ரெட்டி தெரிவித்துள்ளார்.