Home இந்தியா மசூதிகளை இடித்து கோவில்களைக் கட்ட வேண்டும் – பாஜக சுப்பிரமணிய சுவாமி சர்ச்சை!

மசூதிகளை இடித்து கோவில்களைக் கட்ட வேண்டும் – பாஜக சுப்பிரமணிய சுவாமி சர்ச்சை!

792
0
SHARE
Ad

subramaniyam tkபுதுடெல்லி, டிசம்பர் 29 – சுதந்திரத்திற்கு முன்னர் ஆங்கிலேயர்களால் எழுதப்பட்ட வரலாற்றுப் புத்தகங்களை மாற்றி எழுத வேண்டும் என கருத்துத் தெரிவித்துள்ளார் பாஜக தலைவர் சுப்பிரமணிய சுவாமி.

அதேபோல், கோவில்கள் இருந்த இடத்தில் உள்ள மசூதிகளை இடித்து மீண்டும் இந்து கோவில்களை எழுப்ப வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். பனாரஸ் இந்து பல்கலைக்கழக விழா ஒன்றில் கலந்து கொண்டார் பாஜக தலைவர் சுப்பிரமணிய சுவாமி.

அப்போது அவர் பேசுகையில், ‘ சுதந்திரத்திற்கு முன்னர் ஆங்கிலேயர்களால் எழுதப்பட்ட பள்ளி, கல்லூரி வரலாற்றுப் புத்தகங்களை மாற்றி அமைக்க வேண்டும்.

#TamilSchoolmychoice

அவை திரித்து எழுதப்பட்டுள்ளன. இங்கிலாந்து எழுத்தாளர்களால் எழுதப்பட்ட புத்தகங்களை விட்டு விட்டு இந்தியர்களால் எழுதப்பட்ட புத்தகங்களே பிரதானப்படுத்த வேண்டும்.

அதேபோல பள்ளி, கல்லூரி பாடங்களில் அக்பர், பாபர் போன்ற முகலாய மன்னர்கள் குறித்த பாடங்களை நீக்கி விட்டு இந்து மன்னர்கள் குறித்து அதிகம் கூறப்பட வேண்டும்.

மேலும், இந்து கோவில்கள் இருந்த இடத்தில் கட்டப்பட்ட மசூதிகளை இடித்து அங்கு புதிய கோவில்களைக் கட்ட வேண்டும். பள்ளிகளில் தாய்மொழியைத் தவிர்த்து இரண்டாவது மொழியாக சமஸ்கிருதம் கட்டாயம் கற்றுத் தரப்பட வேண்டியது அவசியம்.

பள்ளிகளில் சமஸ்கிருதம் கட்டாயப் பாடமாக்கப்பட வேண்டும். மதமாற்றம் என்பது பல காலமாக நடந்து வருகிறது. இதைத் தடுக்க சட்டம் கொண்டு வராத வரைக்கும் அது தொடரத்தான் செய்யும் என்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார் பாஜக தலைவர் சுப்பிரமணிய சுவாமி.