Home நாடு வீட்டில் தயாரித்த வெடிகுண்டு வெடித்து 2 குழந்தைகள் படுகாயம்

வீட்டில் தயாரித்த வெடிகுண்டு வெடித்து 2 குழந்தைகள் படுகாயம்

530
0
SHARE
Ad

boomஈப்போ, டிசம்பர் 31 – வீட்டில் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டு வெடித்துச் சிதறியதில் இரு குழந்தைகள் படுகாயமடைந்தனர். ஈப்போவில் ஸ்ரீ இஸ்கந்தரில் உள்ள ஒரு வீட்டில் இச்சம்பவம் நிகழ்ந்தது.

மீன்பிடிப்பு நடவடிக்கைக்கு உதவும் விதமாக இந்த வெடிகுண்டு தயாரிக்கப்பட்டதாகத் தெரிகிறது. “குண்டு வெடிப்பில் 9 வயது குழந்தைக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் விரல்களும் முறிந்துள்ளன.

மற்றொரு 5 வயதுக் குழந்தைக்கு முகத்தில் காயங்கள் ஏற்பட்டுள்ளன,” என்று ஈப்போ தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

சம்பவ இடத்தில் இருந்த 2 வயதுக் குழந்தை எந்தவித காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாகத் தப்பித்துள்ளது. சம்பவ இடத்தில் வேறு யாரேனும் இருந்தனரா என்பது தெரியவில்லை.