Home இந்தியா கிரிக்கெட்: டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் தோனி!

கிரிக்கெட்: டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் தோனி!

635
0
SHARE
Ad

Dhoni-Fresh(C)மெல்பர்ன், டிசம்பர் 31 – இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் டோனி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் ஆட்டம் நேற்று மெல்போர்னில் நடைபெற்றது.

டிராவில் முடிந்த இந்த போட்டியை அடுத்து ஆஸ்திரேலிய அணி 4 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது. இந்நிலையில் போட்டி முடிந்த பின்னர் இந்திய அணித்தலைவர் டோனி, டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாகவும், இனி வீராட் கோலி டெஸ்ட் அணியை வழி நடத்துவார் என்றும் இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதன் மூலம் அவரது 9 ஆண்டுகால அனைத்துலக டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. இதுவரையிலும் 90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள டோனி 144 ஆட்டங்களில் 4876 ஓட்டங்களை எடுத்துள்ளார்.

#TamilSchoolmychoice

6 சதங்களையும், 33 அரை சதங்களையும் எடுத்துள்ள டோனியின் அதிகபட்ச ஓட்டங்கள் 224 ஆகும். 60 டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவை வழிநடத்தியுள்ள டோனியின் இந்த திடீர் முடிவு ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

டெஸ்ட் போட்டிகளில் டோனியின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை என தொடர்ந்து கடுமையான விமர்சனங்கள் எழுந்ததே இதற்கு காரணமாக இருக்கலாம் என கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவித்தன.