இவர்கள் புதையுண்ட இடத்திற்கு அருகில் கர்ப்பிணிப் பெண் எம்.நித்யாவதியின் கணவர் வி.ராஜாவும் புதையுண்டார். இவரை மீட்புக்குழுவினர் மீட்டனர். ஆனால், அவரை மீட்கும் போது அவருக்கு கால் முறிவு ஏற்பட்டது.
இந்த தகவலை கேமரன் மலை காவல்துறை அதிகாரி வான் சஹாரி புசூ கூறினார். நிலச்சரிவில் இருந்து தப்பிக்க அவர்கள் தங்கள் வீட்டின் முன் இருந்த நான்கு சக்கர வாகன பட்டறைக்குள் நுழைய முயன்றனர்.
ஆனால், அந்த வாகன பட்டறை மூடியிருந்ததால் அவர்கள் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளனர் எனவும் வி.ராஜாவை மட்டும் காப்பாற்ற முடிந்தது எனவும் காவல்துறை அதிகாரி வான் சஹாரி புசூ கூறினார்.
Comments