Home இந்தியா பெங்களூர் குண்டு வெடிப்பு – ஐஎஸ்ஐஎஸ் சதி வலையா? 

பெங்களூர் குண்டு வெடிப்பு – ஐஎஸ்ஐஎஸ் சதி வலையா? 

534
0
SHARE
Ad

பெங்களூரு, டிசம்பர் 30 – பெங்களூரில் முக்கிய சாலைகளில் ஒன்றான சர்ச் சாலை அருகே, அண்மையில் வீரியம் குறைந்த வெடி குண்டு ஒன்று வெடித்தது. இந்த சம்பவத்தில் ஒரு பெண் பலியானதோடு,  இருவர் காயமடைந்துள்ளனர்.

கடந்த டிசம்பர் 28ஆம் தேதி இரவு சுமார் 8.30 மணியளவில், பரபரப்பாக இயங்கும் சர்ச்சாலை அருகே உள்ள தனியார் உணவு விடுதியின் முன்பு வெடிகுண்டு வெடித்தது.

bangalore2_650_122914090924

#TamilSchoolmychoice

ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்திற்கு டுவிட்டர் மூலம் ஆதரவு திரட்டிய மெஹ்தி என்பவர், கடந்த சில வாரங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளதால், பெங்களூரு நகரம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக காவல் ஆணையர் ரெட்டி கூறியதாவது:- “மெஹ்தியின் கைது நடவடிக்கையைத் தொடர்ந்து, இந்தக் குண்டு வெடிப்புச் சம்பவம் நடந்துள்ளதா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது”.

“சந்தேகத்தின் பேரில் 3 பேரை கைது செய்துள்ளோம். விரைவில், இந்த சம்பவம் தொடர்பாக விரிவான தகவல்கள் வெளியாகும்” என்று அவர் கூறியுள்ளார்.

இதனிடையே, அண்மையில் மத்தியப் பிரதேசத்தில் உள்ள சிறையிலிருந்து தப்பிய சிமி அமைப்பைச் சேர்ந்தவர்கள் இந்தக் குண்டு வெடிப்புச் சம்பவத்தை நிகழ்த்தி இருக்கலாம் என்ற கோணத்திலும் காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.