Home கலை உலகம் யுவன்சங்கர் ராஜா ரகசிய திருமணம்: குடும்பத்தாருக்கும் கூட தகவல் இல்லையா?

யுவன்சங்கர் ராஜா ரகசிய திருமணம்: குடும்பத்தாருக்கும் கூட தகவல் இல்லையா?

810
0
SHARE
Ad

yuvanசென்னை, ஜனவரி 2 – பிரபல இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜாவுக்கு புத்தாண்டு தினமான நேற்று திருமணம் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து தனது குடும்பத்தாருக்கும் கூட அவர் தகவல் தெரிவிக்கவில்லையாம். தமிழகத்தில் உள்ள கீழக்கரை பகுதியில், மணமகளின் வீட்டிலேயே இத்திருமணம் நடந்ததாக விவரமறிந்தோர் கூறுகின்றனர்.

இஸ்லாமியராக மாறிய யுவன் சங்கர் ராஜா அதன் பிறகு இஸ்லாமிய நெறிகளை மிக மிக சிரத்தையுடனும் பக்தியுடனும் கடைப் பிடித்து அதன் வழி நடந்து வருகிறார்.

#TamilSchoolmychoice

yuvan21_2265395gதன் பெயரை அப்துல் ஹாலிக் என்றும் மாற்றிக் கொண்டார். மலேசியாவில் உள்ள ஜப்ஃரோன்னிசாவுக்கும் இவருக்கும் அண்மையில் திருமணம் நிச்சயிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

இதை இருதரப்புமே மறுக்கவில்லை. திருமண தேதி குறித்தும் வாய் திறவாமல் இருந்தார் யுவன். இந்நிலையில் புத்தாண்டு தினத்தன்றே திருமணத்தை நடத்திவிட வேண்டும் என திடீரென முடிவு செய்தாராம் யுவன்.

இதனால் கீழக்கரையில் மணமகள் வீட்டிலேயே திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடந்தன. அவசரமாக, ரகசியமாக நடந்த திருமணம் என்பதால் நெருக்கமானவர்களில் ஒருவருக்குக் கூட அவர் விவரம் தெரிவிக்கவில்லையாம்.

Yuvan-ZafrunNizar1அவ்வளவு ஏன், தனது தந்தைக்கும், தனது இத்திருமணத்திற்குப் பக்கபலமாக இருந்த சகோதரர் கார்த்திக் ராஜாவையும் கூட திருமணத்திற்கு அழைக்கவில்லை யுவன்.

இதனால் அவரது நண்பர்கள் அதிர்ச்சியாகி இருப்பதாகத் தகவல். அதுமட்டுமல்ல, இந்த திருமணம் கீழக்கரையில் நடந்தாலும் அங்கும் வெகு விமரிசையாக நடைபெறாமல் மிக மிக எளிமையாகவும் ரகசியமாகவும் நடந்திருக்கிறது.