Home இந்தியா தி.மு.க கட்சிப் பதவியில் இருந்து மு.க.ஸ்டாலின் விலகலா?

தி.மு.க கட்சிப் பதவியில் இருந்து மு.க.ஸ்டாலின் விலகலா?

630
0
SHARE
Ad

m-k-stalinசென்னை, ஜனவரி 5 – கட்சித் தலைமையுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக, திமுக பொருளாளர் பதவியில் இருந்து மு.க.ஸ்டாலின் திடீரென விலகியதாக இன்று காலை பரபரப்புத் தகவல் வெளியானது.

இதனால் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்களும், செய்தியாளர்களும் குவியத் தொடங்கினர். இந்நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்யவில்லை என்றும் இது தொடர்பான செய்திகள் அனைத்தும் வெறும் வதந்திதான் என்றும் செய்தியாளர்களிடம் ஸ்டாலின் தெளிவுபடுத்தினார்.

திமுகவில் தனக்கு தலைவர் பதவி அல்லது பொதுச்செயலாளர் பதவி அளிக்கப்பட வேண்டும் என ஸ்டாலின் விரும்புவதாகக் கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice

ஆனால் தலைவர் பதவியில் இருந்து விலக விரும்பாத கருணாநிதி, பொதுச்செயலாளர் பதவியில் ஸ்டாலினை நியமிக்கவும் தயங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் ஏற்பட்ட கடும் அதிருப்தி காரணமாக, இளைஞரணி செயலர், பொருளாளர் ஆகிய இரு கட்சிப் பதவிகளில் இருந்தும் ஸ்டாலின் விலகியதாக நேற்று காலை தகவல் பரவியது.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், ஜனநாயக முறைப்படி நடந்து வரும் திமுக உட்கட்சித் தேர்தல் குறித்து திட்டமிட்டு சிலர் பரப்பிவிடும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.

“நான் கட்சியில் இருந்து வெளியேறுவதாக வந்த செய்தி தவறானது. கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் இவ்வாறு தகவல் பரப்பி விடப்பட்டுள்ளது. தலைவர் பதவிக்கு கருணாநிதியும்,பொதுச் செயலாளர் பதவிக்கு பேராசியர் அன்பழகனும் போட்டியிடுகின்றனர்.

நான் தலைவர் பொறுப்புக்கு போட்டியிடவில்லை. வரும் 9ஆம் தேதி நடக்கும் தேர்தலில் நான் பொருளாளர் பதவிக்கே போட்டியிடுகிறேன்.

கட்சி தலைவர் கருணாநிதிதான். இது தான் எனது விருப்பமும் கூட. எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி கட்சிக்காக தொடர்ந்து பாடுபடுவேன்,” என்று ஸ்டாலின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.