Home வணிகம்/தொழில் நுட்பம் விண்டோஸ் போன் தயாரிப்பினை மறக்கவில்லை – மைக்ரோசாப்ட்!

விண்டோஸ் போன் தயாரிப்பினை மறக்கவில்லை – மைக்ரோசாப்ட்!

677
0
SHARE
Ad

microsoft-live-event-windows-phone-001கோலாலம்பூர், ஜனவரி 5 – விண்டோஸ் போன்களை மைக்ரோசாப்ட் மறக்கவில்லை. வெகு விரைவில் பல்வேறு ரகங்களில் விண்டோஸ் போன்கள் வெளியிடப்படும் என மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இயங்குதளப் பிரிவின் துணைத் தலைவர் ஜோ பெல்ஃபியோர் தெரிவித்துள்ளார்.

தொழில்நுட்ப சந்தைகளில் கூகுளின் அண்டிரொய்டு இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்ட திறன்பேசிகளும், ஆப்பிளின் ஐஒஎஸ் திறன்பேசிகளும் விற்பனையில் சாதனை படைத்துக் கொண்டிருக்கையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது விண்டோஸ் போன்கள் பற்றி எந்தவொரு தகவல்களையும் வெளியிடாமல் இருந்து வந்தது.

அண்டிரொய்டு மற்றும் ஆப்பிளின் வர்த்தகப் போட்டியை தாக்குபிடிக்க முடியாமல், மைக்ரோசாப்ட், செல்பேசிகள் தயாரிப்பில் இருந்து பின்வாங்கி விட்டதா என சந்தேகம் எழும் வண்ணம் இது தொடர்பாக மைக்ரோசாப்ட் பல மாதங்களாக மௌனம் சாதித்து வந்தது.

#TamilSchoolmychoice

இந்நிலையில் இதுபற்றி மைக்ரோசாப்ட்டின் இயங்குதளப் பிரிவின் துணைத் தலைவர் ஜோ பெல்ஃபியோர் கூறுகையில், “சீனாவின் வர்த்தக சந்தைகளுக்கென பிரத்யேகமாக திறன்பேசிகளை தயார் செய்து வருகின்றோம்.

எதிர்வரும் சீனப் புத்தாண்டை முன்னிட்டு, மைக்ரோசாப்ட்டின் விண்டோஸ் போன்கள் வெளியாகும்” என்று அவர் கூறியுள்ளார். சீனா மற்றும் இந்திய சந்தைகளை சியாவுமி திறன்பேசிகள் முழுவீச்சில் ஆக்கிரமித்து வரும் நிலையில்,

மைக்ரோசாப்ட், சியாவுமியுடன் போட்டி போடும் அளவிற்கு குறைந்த விலையில், சிறந்த அம்சங்களைக் கொண்ட திறன்பேசிகளை வெளியிடுமா என்பதை பொறுத்திருந்துதான் காணவேண்டும்.