Home கலை உலகம் நடிகர் வினீத் இயக்குநராக அறிமுகம்!

நடிகர் வினீத் இயக்குநராக அறிமுகம்!

627
0
SHARE
Ad

vineeth-photo-1சென்னை, ஜனவரி 8 – நடிகர் மற்றும் பரதநாட்டிய கலைஞரான வினீத் இயக்குநராக புது அவதாரம் எடுத்துள்ளார். ‘புதிய முகம்’, ‘ஆவாரம் பூ’, ‘காதல் தேசம்’, ‘சந்திரமுகி’ உள்ளிட்ட பல ஏராளமான தமிழ், தெலுங்கு, கன்னடம், மற்றும் மலையாள படங்களில் நடித்தவர் வினீத்.

மேலும் உலகம் முழுவதும் பல நாடுகளில் பரதநாட்டியம் நிகழ்ச்சிகள் பலவற்றில் மேடை ஏறியவர். இப்போது ‘ஆயாள் ஞானல்ல’ (அந்த ஆள் நான் இல்லை) என்னும் படத்தை இயக்க உள்ளார்.

படத்தில் அவர் நடிக்கவில்லை. மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரும் நஸ்ரியாவின் கணவரும் ஆன பாஹ்த் ஃபாசில் தான் இந்த படத்தில் கதாநாயகன்..

#TamilSchoolmychoice