சென்னை, ஜனவரி 10 – ராஜபக்சே தோல்வி மூலம் இலங்கையில் வரலாறு மாற்றப்பட்டுள்ளதாக திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளனர். இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில் ராஜபக்சே படுதோல்வி அடைந்துள்ளார்.
இதனால் இலங்கையில் புதிய அதிபராக மைத்திரிபால சிறிசேனா பதவி ஏற்க இருக்கிறார். இலங்கையில் நடந்த ஆட்சி மாற்றம் தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர் அளித்த பதிலாவது :- “இலங்கை போரின் போது நடைபெற்ற படுகொலைகள் மற்றும் மனிதஉரிமை மீறல் ஆகியவை தொடர்பாக ராஜபக்சேவிடம் விசாரணை நடத்த வேண்டும். தற்போது புதிதாக பொறுப்பேற்க உள்ள அரசு கடந்த காலங்களில் நடந்த தவறுகளை செய்யாமல் இருக்க வேண்டும்”.
கடந்த கால தவறுகளையும் சரி செய்ய வேண்டும்” என்றார். மேலும் ராஜபக்சே தோல்வி மூலம் இலங்கையில் வரலாறு மாற்றி எழுதப்பட்டுள்ளது எனவும் கருணாநிதி தெரிவித்தார்.