Home இந்தியா தமிழக அமைச்சர்கள் 3 பேர் நீக்கம்

தமிழக அமைச்சர்கள் 3 பேர் நீக்கம்

645
0
SHARE
Ad

jeya-sliderசென்னை, பிப்.28- தமிழக அமைச்சரவையில் இருந்து சுற்றுலாத் துறை அமைச்சர் எஸ். கோகுல இந்திரா, சுகாதாரத் துறை அமைச்சர் வி.எஸ்.விஜய், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதி ஆகியோர் புதன்கிழமை நீக்கப்பட்டனர். மேலும் அதிமுகவில் மூன்று பேர் வகித்த கட்சிப் பதவிகளும் பறிக்கப்பட்டுள்ளன.

திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ., டி.பி.பூனாட்சி, அரசு கொறடா வைகைச் செல்வன், ஜோலார்பேட்டை எம்.எல்.ஏ. கே.சி.வீரமணி ஆகியோருக்கு அமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் ஜெயலலிதாவின் பரிந்துரையை ஏற்று இதற்கான உத்தரவை தமிழக ஆளுநர் கே.ரோசய்யா பிறப்பித்துள்ளதாக ஆளுநரின் செயலாளர் (பொறுப்பு) எஸ்.விவேகானந்தன் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

#TamilSchoolmychoice

காதி மற்றும் கிராமத் தொழில்கள் வாரியமானது, அமைச்சர்  பி. செந்தூர்பாண்டியனிடம் இருந்து பிரிக்கப்பட்டு புதிய அமைச்சரான டி.பி.பூனாட்சியிடம் வழங்கப்பட்டுள்ளது. கோகுல இந்திரா வகித்து வந்த சுற்றுலாத் துறை அமைச்சர் பொறுப்பு, பி. செந்தூர் பாண்டியனிடம் அளிக்கப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வி அமைச்சர்,  பள்ளிக் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சராக அருப்புக்கோட்டை தொகுதி எம்.எல்.ஏ.வும்., அரசு தலைமை  கொறடாவுமான வைகைச்செல்வன் நியமிக்கப்பட்டுள்ளார்.

பள்ளிக் கல்வித் துறையுடன் இணைந்திருந்த சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைத் துறை, பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறைகளின் பொறுப்பு உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.பி.முனுசாமியிடம் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது. சுகாதாரத் துறை அமைச்சராக, கே.சி.வீரமணி நியமிக்கப்பட்டுள்ளார்.