கோலாலம்பூர், பிப்.28. பாடாங்செராயில் கோபாலகிருஷ்ணன் சுயேச்சையாக நிற்கப்போவதாக சமீபத்தில் அறிவித்திருந்தார். ஆனால் அது நிறைவேறாகாமல் போவதற்கான சாத்தியக்கூறுகள் இப்போது ஏற்பட்டுள்ளன.
ஐந்தாண்டுகளுக்கு முன் நடந்த பெர்சே 1.0 பேரணியில் கலந்துகொண்டதோடு, பொது ஒழுங்கை அத்துமீறிய குற்றத்திற்காக தற்போதைய பாடாங்செராய் நாடாளுமன்ற உறுப்பினர் கோபாலகிருஷ்ணனுக்கு நேற்று, செஷன்ஸ் நீதிமன்றத்தில் 6,000 வெள்ளி அபராதமும், கட்டத்தவறினால், இரண்டு மாதங்கள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.
கோபாலகிருஷ்ணன் தேர்தலில் நிற்கும் கனவு பலிக்குமா?
சட்டவிதிப்படி ஒருவர் 2000 வெள்ளிக்கு மேல் அபராதம் செலுத்தினால், தேர்தலில் போட்டியிட முடியாது என்பது அறிந்ததே. இதன்படி கோபாலகிருஷ்ணன் தேர்தலில் போட்டியிடமுடியாது. அப்படி அவர் மேல் முறையீடு செய்தாலும், தேர்தல் நெருங்கிவிட்டதால் அதற்குள் தீர்ப்பு வருவதும் சந்தேகமே. இந்நிலையில் வரும் தேர்தலில் பிகேஆர் வேட்பாளர் சுரேந்திரனுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.