கோலாலம்பூர், ஜனவரி 13 – அல்தான்துயா வழக்கில் கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட இரு முன்னாள் அதிரடிப்படை அதிகாரிகளில் ஒருவரான காப்பரல் சைருல் அசார் உமார் இன்று கூட்டரசு நீதிமன்றத்தில் கலந்து கொள்ளவில்லை.
அவர் ஆஸ்திரேலியாவில் இருப்பதாகவும், மலேசியாவிற்கு திரும்ப அவரிடம் காசு இல்லையென்றும் செய்திகள் வெளிவந்துள்ளன.
அல்தான்துயா வழக்கில் இன்று கூட்டரசு நீதிமன்றத்தில் இறுதித் தீர்ப்பு வழங்கப்பட இருப்பது தெரிந்தும் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அதற்குக் காரணம் நாடு திரும்ப அவரிடம் போதுமான நிதி என்று சைருல் தரப்பை அதிகாரிகள் தொடர்பு கொண்ட போது கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், சைருலை கைது செய்யுமாறு, நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்னாள் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட அல்தான்துயாவின் மரணத்திற்கு, குற்றம் சாட்டப்பட்ட இருவர் தான் காரணம் என்று கூறி நீதிபதி அரிபின் ஜகாரியா தலைமையிலான 5 உறுப்பினர்கள் குழு இன்று தீர்ப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது.