Home இந்தியா கிரண் பேடி பாஜகவில் சேர்ந்தார்! அடுத்த டில்லி முதல்வரா?

கிரண் பேடி பாஜகவில் சேர்ந்தார்! அடுத்த டில்லி முதல்வரா?

589
0
SHARE
Ad

Kiran Bediபுதுடில்லி, ஜனவரி 15 – முன்னாள் காவல் துறை உயர் அதிகாரியும் (ஐபிஎஸ்) புகழ்பெற்ற டில்லி திஹார் சிறைச்சாலையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தியவருமான கிரண் பேடி (படம்) பாஜக தலைவர் அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார்.

டில்லி யூனியன் பிரதேசத்திற்கான தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் வேளையில் அவர் பாஜகவில் இணைந்துள்ளது, டில்லி தொகுதிகளில் ஒன்றில் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பையும், வென்றால் அடுத்த டில்லி முதல்வராகவும் அவரே தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.

Anna Hazare Kiran Bedi

#TamilSchoolmychoice

அன்னா ஹசாரேயுடன் கிரண் பேடி

ஊழல் ஒழிப்பிற்கு எதிராகவும் அவர் தீவிரமாகப் போராடுபவர் என்பதால், பாஜகவிற்கு கடும் போட்டியை வழங்கிக் கொண்டிருக்கும் மற்றொரு அரசியல்வாதி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சரியான மாற்றாக அவர் பாஜகவால் களமிறக்கப்படுவதாகவும் புதுடில்லி அரசியல் வட்டாரங்கள் கணித்துள்ளன.

கிரண்பேடி முதல் பெண் ஐபிஎஸ் காவல் துறை அதிகாரியாவார். தனது பதவி ஓய்வுக்குப் பின்னர் அன்னா ஹசாரேயுடன் இணைந்து ஊழல் ஒழிப்பிற்கு எதிரான போராட்டங்களிலும் அவர் முன்னணி வகித்தார்.

படங்கள்: EPA