Home வணிகம்/தொழில் நுட்பம் இந்தியாவில் அறிமுகமான சாம்சுங்கின் முதல் டைசென் திறன்பேசி!

இந்தியாவில் அறிமுகமான சாம்சுங்கின் முதல் டைசென் திறன்பேசி!

644
0
SHARE
Ad

புது டெல்லி, ஜனவரி 15 – உலகின் முன்னணி செல்பேசிகள் தயாரிப்பு நிறுவனமான சாம்சுங், தனது ‘டைசென்’ (Tizen) இயங்குதளத்தை மையமாகக் கொண்டு இயங்கும் முதல் திறன்பேசியினை இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது. z1 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திறன்பேசிகளை அறிமுகப்படுத்தியதன் மூலம், சாம்சுங் அண்டிரொய்டு இயங்குதளத்தினைத் தவிர்த்து டைசெனை முன்னிலைப்படுத்தத் தொடங்கி உள்ளது.

Samsung Tizen

கடந்த ஜனவரி 5ஆம் தேதி அமெரிக்காவின் லாஸ் வெகாஸ் நகரில் நடைபெற்ற கண்காட்சியில் சாம்சுங் டைசன் அறிமுகப்படுத்தப்பட்டபோது….

#TamilSchoolmychoice

உலக அளவில் திறன்பேசிகளின் சந்தைகளில் மூன்றாம் இடம் வகிக்கும் இந்தியாவில், சாம்சுங் இந்த முயற்சியினை மேற்கொள்ள முக்கிய காரணம், இந்தியாவில் திறன்பேசிகளின் பயன்பாடு எந்த அளவிற்கு உள்ளதோ அதற்குச் சமமாக திறன்பேசிகளை பயன்படுத்தாதவர்களின் எண்ணிக்கையும் உள்ளது. முதல் திறன்பேசியினை வாங்க நினைப்பவர்களுக்கு மிகக் குறைந்த விலையில், டைசென் திறன்பேசிகளை அறிமுகப்படுத்தலாம் என்பதே சாம்சுங்கின் நோக்கமாகும்.

இந்த z1 திறன்பேசிகள் 4 அங்குல அளவு கொண்டதாகவும், எளிதில் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் சிறந்த பயனர் இடைமுகம் கொண்டதாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. செயலிகளைப் பொறுத்தவரையில், பேஸ்புக், டுவிட்டர், யூ-டியுப் போன்றவை திறன்பேசிகளில் ஏற்கனவே மேம்படுத்தப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல், ‘கூகுள் ப்ளே ஸ்டோர்’ (Google Play Store)-ல் டைசென் இயங்குதளத்தில் மேம்படுத்திக் கொள்ளும் வகையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட செயலிகள் உள்ளன.

இந்த z1 திறன்பேசிகளின் விலை 5700 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், இந்திய தயாரிப்பு நிறுவனங்களான மைக்ரோமேக்ஸ், கார்பன் போன்றவற்றிற்கு கடும் போட்டி அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.