Home உலகம் காஷ்மீர் குறித்து இந்தியாவுடன் பேச தயார் – பாகிஸ்தான்!

காஷ்மீர் குறித்து இந்தியாவுடன் பேச தயார் – பாகிஸ்தான்!

478
0
SHARE
Ad

india.kashmir.delhi.lgஇஸ்லாமாபாத், ஜனவரி 16 – இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த காஷ்மீர் விவகாரம் இடம்பெற வேண்டும். அது இல்லை எனில் எத்தகைய பேச்சுவார்த்தைக்கும் உடன் படமாட்டோம் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்த்தை தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி, கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாகிஸ்தான் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அஜீஸை சந்தித்து வலியுறுத்தினார்.

பேச்சுவார்த்தையின் முடிவில் சர்தாஜ் அஜீஸ் மற்றும் ஜான் கெர்ரி இருவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர்கள் கூறியதாவது:-

#TamilSchoolmychoice

“சமீப காலமாக, இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் நிகழும் வன்முறைகளும், பதற்றமான சூழல்களும் வேதனையைத் தருகின்றன”.

“இவ்விரு நாடுகளுக்கும் இடையே உள்ள பிரச்னைகளை பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு கொண்டு வருவதற்காக, இரு நாடுகளையும் அமெரிக்கா ஊக்கப்படுத்தும்” என்று ஜான் கெர்ரி கூறினார்.

அவரைத் தொடர்ந்து பேசிய சர்தாஜ் அஜீஸ், “காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர்களை பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித் சந்தித்துப் பேசிய காரணத்திற்காக, இரு நாடுகளின் வெளியுறவுத் துறைச்செயலர்கள் அளவிலான பேச்சுவார்த்தையை இந்தியா கடந்த ஆகஸ்ட் மாதம் ரத்து செய்தது”.

“இது, பேச்சுவார்த்தையில் இந்தியாவிற்கு ஆர்வமில்லை என்பதையே காட்டுகிறது. காஷ்மீர் விவாகரம் தவிர்த்துவிட்டு, இந்தியாவுடன், பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடத்தாது”.

“எல்லைப் பகுதியில் இந்தியாவே அத்துமீறி எங்களைத் தாக்குகிறது. அதற்கு பதிலடியையே நாங்கள் கொடுக்கின்றோம்” என்று அவர் கூறியுள்ளார்.