Home இந்தியா சோனியா காந்தி பற்றிய சர்ச்சைக்குரிய புத்தகம் இந்தியாவில் வெளியானது!

சோனியா காந்தி பற்றிய சர்ச்சைக்குரிய புத்தகம் இந்தியாவில் வெளியானது!

606
0
SHARE
Ad

sonia gandhi bookபுது டெல்லி, ஜனவரி 16 – கடந்த காங்கிரஸ் ஆட்சியில், ஒட்டுமொத்த காங்கிரசாரும் மிகக் கடுமையாக எதிர்த்த புத்தகம் ‘தி ரெட் ஸேரி’ (The Red Sari). ஸ்பெயின் எழுத்தாளரான ஜேவியர் மோரோ, ஸ்பானிஷ் மொழியில் எழுதிய ‘El Sari Rojo’ என்ற புத்தகத்தின் ஆங்கில பதிப்பாகும்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எழுதப்பட்ட இந்த புத்தகம், சோனியா பற்றி உண்மைக்கு புறம்பான தகவல்களைக் கொண்டுள்ளதாகக் கூறி இந்தியாவில் வெளியிட தடை செய்யப்பட்டது.

மேலும், கடந்த 2010-ம் ஆண்டு எழுத்தாளர் மோரோவிற்கு இது தொடர்பாக சட்டபூர்வமான அறிக்கை ஒன்றும் அனுப்பப்பட்டது. இந்நிலையில், இந்த சர்ச்சைக்குரிய புத்தகம் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளதாக பிரபல புத்தக வெளியீட்டாளர் ப்ரியா கபூர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “தி ரெட் ஸேரி புத்தகம் இந்தியாவில் வெளியாகி உள்ளது. உங்களது பிரதியை விரைவில் பெற்றுக் கொள்ளுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த புத்தகம் பற்றி காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகையில், “நேரு-காந்தி குடும்பம், வங்காளதேச போரில் பின்னடைவு, அவசரநிலை பிரகடனம், ‘ஆபரேஷன் புளூ ஸ்டார்’ (Operation Blue Star) பற்றி முழுமையாக தொகுத்தளிக்கப்பட்டுள்ளது.

மேலும், சோனியாவின் சிறுவயது வாழ்க்கை, காதல் விவகாரம், பிரதமர் பதவி குறித்து எழுந்த சர்ச்சை என அவரது அனைத்து வாழ்க்கை நிகழ்வுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் அவற்றில் பல தகவல்கள் பரபரபிற்காக தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளன.

மோரோ இதற்கு முன்பு எழுதிய ‘பேஷன் இந்தியா’ (Pasion India) என்ற புத்தகம் சோனியா காந்தி பற்றியது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.