Home உலகம் பாரிஸ் இரயில் நிலையத்தை தகர்ப்போம் – தீவிரவாதிகள் மிரட்டல்!

பாரிஸ் இரயில் நிலையத்தை தகர்ப்போம் – தீவிரவாதிகள் மிரட்டல்!

542
0
SHARE
Ad

Gare-de-lEst_3166815bபாரிஸ், ஜனவரி 19 – பாரிஸ் நகரில் உள்ள இரயில் நிலையம் ஒன்றிற்கு கடந்த சனிக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, பிரான்ஸ் வந்திருந்த தருணத்தில் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டதால், அசம்பாவிதங்களை தவிர்க்க இரயில் நிலையம் மூடப்பட்டது.

‘சார்லி ஹெப்டோ’ பத்திரிகை அலுவலகத்தின் மீதான தாக்குதல், யூத பல்பொருள் அங்காடியில் பிணையக் கைதிகள் பிடித்து வைப்பு, கொலம்பஸ் நகரின் தபால் அலுவகத்தில் மர்ம நபர் ஆயுதங்களுடன் நுழைந்த சம்பவம் என தொடர் தீவிரவாத அச்சுறுத்தல்களுக்கு பிரான்ஸ் ஆளாகி வருகின்றது. காவல் துறை அதிகாரிகளின் விசாரணை, தீவிரவாத தடுப்புப் படையினரின் கண்காணிப்பு என கடும் பாதுகாப்பு வளையத்திற்குள் பிரான்ஸ் மக்கள் பரிதவித்து வரும் நிலையில், சமூக விரோத கும்பல் அவ்வபோது வீண் மிரட்டல்களையும், தொடர் வதந்திகளையும் பரப்பி வருகின்றன.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை, பாரிஸ் நகரில் உள்ள காரே டெல் கிழக்கு இரயில் நிலையத்தை வெடிகுண்டு வைத்து தகர்க்கப்போவதாக மிரட்டல் வந்தது. இந்த இரயில் நிலையம், கிழக்கு பிரான்ஸின் முக்கிய நகரங்களுக்கும், கிழக்கு நாடுகள் சிலவற்றுக்கும் இரயில் சேவை அளித்து வருகின்றது.

#TamilSchoolmychoice

தீவிரவாத அச்சுறுத்தல்களுக்கு இடையில் இந்த வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து காவல் துறையினர் அந்தப் பகுதிக்கு விரைந்து வந்து பயணிகளை பத்திரமாக வெளியேற்றினர். மேலும், இரயில் நிலையமும் மூடப்பட்டது. இதற்கிடையே, பல் பொருட்கள் அங்காடியில் புகுந்த தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்து இருந்த 12 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். அவர்களுக்கும் இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்களுக்கும் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.