Home கலை உலகம் டெனிஸ், ஜாஸ்மின் நடிப்பில் ‘வேற வழி இல்லை’ – புதிய திகில் படம்

டெனிஸ், ஜாஸ்மின் நடிப்பில் ‘வேற வழி இல்லை’ – புதிய திகில் படம்

633
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜனவரி 20 – ‘வெட்டிப்பசங்க’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு வீடு புரொடக்சன்ஸ் நிறுவனம் தற்போது புதிய திகில் படம் ஒன்றை தயாரித்து வருகின்றது.

Vera vazhi illai

 (‘வேற வழி இல்லை’ படக்குழுவினர்)

#TamilSchoolmychoice

இத்திரைப்படத்தை மெர்ப் ஃபிலிம் பேக்டரியின் தலைவரும், பிரபல படத்தொகுப்பாளருமான பிரேம்நாத் இயக்குகின்றார்.

இந்தியா மற்றும் மலேசியா கூட்டுத் தயாரிப்பில் உருவாகிவரும் இப்படம் மலேசியத் திரையரங்குகள் மட்டுமின்றி தமிழ்நாட்டுத் திரையரங்குகளிலும் வெளியிடப்படவிருக்கின்றது.

இந்த படத்தில் டெனிஸ், ஜாஸ்மின், விகடகவி மகேன், ஆல்வின் மார்ட்டின் உள்ளிட்ட முன்னணி மலேசிய நட்சத்திரங்கள் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

Vera vazhi illai 1

(கதாநாயகன் டெனிஸ் மற்றும் ஜாஸ்மின்) 

விரைவில் வெளிவரவுள்ள இப்படம் குறித்து அப்படத்தின் தயாரிப்பாளரும், கதாநாயகனுமான டெனிஸ்குமார் கூறுகையில், “இந்த படம் நகைச்சுவை நிறைந்த திகில் படம். குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரையும் கவரும் விதமாக கதை உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன” என்று தெரிவித்தார்.

– ஃபீனிக்ஸ்தாசன்