Home உலகம் பிரபல விளம்பர மாடலின் உயிரைப் பறித்த இரயில்!

பிரபல விளம்பர மாடலின் உயிரைப் பறித்த இரயில்!

581
0
SHARE
Ad

1796681_10152836906984855_6256308915914381385_nலாஸ் ஏஞ்சல்ஸ், ஜனவரி 20 – அமெரிக்காவில் உடற்பயிற்சித் துறையிலும், விளம்பரத் துறையிலும்,  ‘பிராவோ’ போன்ற தொலைக்காட்சித் தொடர்களிலும் மிகப் பிரபல நட்சத்திரமாக வலம் வந்தவர் கிரேக் பிலிட்.

கேல்வின் க்ளெயின், அண்டர் ஆர்மர், ஓல்டு நேவி ஜீன்ஸ் போன்ற முன்னணி நிறுவனங்களுக்கு விளம்பரத் தூதுவராகவும் இருந்தவர்.

இது தவிர, மேக்சிம், அமெரிக்கன் ஹெல்த் & பிட்னஸ், மென்ஸ் பிட்னஸ், மசில் & பிட்னெஸ் மற்றும் மென்ஸ் ஹெல்த் போன்ற பல உடல் ஆரோக்கியம் தொடர்பான இதழ்களின் அட்டைப் படங்களை அலங்கரித்தவர்.

#TamilSchoolmychoice

பிரபல ஹாலிவுட் நடிகர் சில்வெஸ்டர் ஸ்டோலன் நடித்த ‘கிரட்ஜ் மேட்ச்’ திரைப்படத்திலும், ‘தி வாட்ச்மேன்’ திரைப்படத்திலும் கிரேக் பிலிட் நடித்துள்ளார்.

Greg-Plitt

(சம்பவம் நடந்த இரயில் நிலையம்)

இத்தனைப் பிரபலமானவரான கிரேக் பிலிட்டின் உயிரை காலம் வெகு சீக்கிரமே கொண்டு சென்றுவிட்டது.

கடந்த ஜனவரி 17-ம் தேதி, சனிக்கிழமை ஒரு விளம்பர காணொளியை தனது கேமெராவில் பதிவு செய்வதற்காக லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள ஒரு இரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தவர் எதிர்பாராதவிதமாக இரயிலில் அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்துவிட்டார்.

1496368_10152117708484855_1479247889_o

பேஸ்புக்கில் சுமார் 613,826 ரசிகர்களைக் கொண்டுள்ள கிரேக் பிலிட்டின் இறப்பை அவரது ரசிகர்கள் இன்று வரை நம்ப மறுத்து வருகின்றனர்.

இந்நிலையில், அவரது பேஸ்புக்கில் கிரேக்கின் பெற்றோர் தங்களது மகனின் மறைவு குறித்து அவரது ரசிகர்களுக்கு மிக உருக்கமான பதிவு ஒன்றை செய்துள்ளது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.