Home கலை உலகம் கோலாலம்பூரில் இன்று பாரிஸ் ஹில்டனின் இசை நிகழ்ச்சி!

கோலாலம்பூரில் இன்று பாரிஸ் ஹில்டனின் இசை நிகழ்ச்சி!

705
0
SHARE
Ad

Paris hiltonகோலாலம்பூர், ஜனவரி 23 – இன்று டாமன்சாரா பெர்டானாவில் நடைபெறவுள்ள ஒரு இசை நிகழ்ச்சியில் பங்குபெறுவதற்காக அமெரிக்க பாப் பாடகியும், பிரபலமுமான பாரிஸ் ஹில்டன் கோலாலம்பூர் வந்துள்ளார்.

பாரிஸ் ஹில்டனுக்கு இது முதல் மலேசியப் பயணம் ஆகும்.

சவுத் கொரியன் பாப் குழு 2ஏஎம், ப்ளாக்கிடு ஐ பியஸ் மெம்பர்ஸ் தாபு மற்றும் ஆஸ்திரேலியன் டெனர் மார்க் வின்செண்ட் ஆகிய இசைக்குழுவினருடன் இணைந்து ‘எம்பையர் சிட்டி’ என்ற இடத்தில் இந்த இசை நிகழ்ச்சியை வழங்கவுள்ளார்.

#TamilSchoolmychoice

இது குறித்து பாரிஸ் ஹில்டன் நேற்றே தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில், “பாய் துபாய்… நான் கோலாலம்பூருக்கு செல்கிறேன்… என்னால் காத்திருக்க முடியவில்லை. முதல் முறையாக மலேசியாவைப் பார்க்க போகிறேன்” என்று தெரிவித்திருந்தார்.

232,000 சதுரப் பரப்பளவில் 8  பெருநிறுவன கோபுரங்கள் மற்றும் அலுவலகங்கள், 3 அனைத்துலக ஐந்து நட்சத்திர விடுதிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய எம்பையர் சிட்டியின் வளர்ச்சியை முன்னிட்டு, முற்றிலும் 1920-ம் ஆண்டு கருப்பொருளில் இந்த நிகழ்ச்சி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.