ரியாத், ஜனவரி 23 – நீண்ட காலமாக சவுதி அரேபியாவின் ஆட்சி பீடத்தில் இருந்து 90 வயதான மன்னர் அப்துல்லா பின் அப்துல் அசிஸ் நேற்று வெள்ளிக்கிழமை காலமானர் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவருக்குப் பதிலாக சவுதியின் புதிய மன்னராக இளவரசர் சல்மான் நியமிக்கப்பட்டுள்ளார்.
மறைந்த மன்னரின் ஒன்றுவிட்ட சகோதரர் (half brother) மோக்ரென் (Moqren) இளவரசராக நியமிக்கப்பட்டுள்ளார்.
2005ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் இருந்து, சவுதி அரேபியாவை கட்டுக் கோப்பாக வைத்திருந்த மன்னர் அப்துல்லா காலமானதைத் தொடர்ந்து, அங்கு புதிய அரசியல் மாற்றங்கள் ஏற்படுமா என்ற ஆர்வம் அரசியல் பார்வையாளர்களிடையே எழுந்துள்ளது.
அப்துல்லா சவுதியின் ஆறாவது மன்னராவார். நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, கடந்த டிசம்பர் முதல் அவர் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தார்.
எண்ணெய் உற்பத்தி நாடுகளின் தலை நாடாகவும், இஸ்லாமிய உலகின் தலைமைப் பீடமாகவும் சவுதி அரேபியா திகழ்ந்து வருகின்றது.
(படம்: EPA)