Home தொழில் நுட்பம் இனி கணினியிலும் ‘வாட்ஸ் அப்’ பயன்படுத்தலாம்!

இனி கணினியிலும் ‘வாட்ஸ் அப்’ பயன்படுத்தலாம்!

600
0
SHARE
Ad

whatsapp-for-pcகோலாலம்பூர், ஜனவரி 23 – இளைஞர்களின் தற்போதய மந்திர சொல் ‘வாட்ஸ்அப்’ (Whatsapp). 2009-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட வாட்ஸ் அப், ஆறு வருட இடைவெளியில் சுமார் 700 மில்லியன் பயனர்களைக் கொண்டிருப்பது பேஸ்புக்கே நிகழ்த்திராத சாதனை

அண்டிரொய்டு, ஐஒஎஸ், பிளாக்பெர்ரி மற்றும் விண்டோஸ் என அனைத்து இயங்கு தளங்களுக்கும் ஏற்ற செயலியான வாட்ஸ் அப்-ஐ, கணினி மூலமாக பயன்படுத்துவது எளிதான ஒன்றல்ல.

இதுவரை வாட்ஸ் அப் செயலியை, கணினியில் பயன்படுத்த ‘ப்ளூ ஸ்டாக்ஸ்’ (Blue Stacks) என்ற அண்டிரொய்டு எமுலேட்டர் மென்பொருளைத் தான் பயன்படுத்த வேண்டி இருந்தது.

#TamilSchoolmychoice

எமுலேட்டர் என்பது நவீன தொழில்நுட்பத்தின் மெய்நிகர் செயல்வடிவமாகும். உதாரணமாக இந்த  அண்டிரொய்டு எமுலேட்டரை நமது கணினியில் மேம்படுத்தும் போது, வாட்ஸ் அப் உள்ளது போன்ற செயல்வடிவம் நமது கணினியில் கிடைக்கும்.

எனினும், இந்த வழிமுறையை பயனர்கள் ஏற்றுக் கொள்ள விரும்பவில்லை. பயனர்கள், பேஸ்புக் போன்று இணைய தளங்களில் நேரடியாக பயன்படுத்துமாறு வாட்ஸ்அப் -ஐ வடிவமைக்க அந்நிறுவனத்திடம் தொடர் கோரிக்கைகளை முன் வைத்தனர்.

அதன் பலனாக வாட்ஸ் அப் நிறுவனம், தற்போது புதிய இணையதள சேவையை வழங்கி உள்ளது. இதற்கு பிரத்யேக மென்பொருள் எதுவும் தேவையில்லை.

‘க்ரோம் உலாவி’ (Chrome Browser) மட்டும் போதுமானது. எனினும், இந்த சேவையில் திறன்பேசிகளில் உள்ளது போன்று அனைத்து வசதிகளையும் பயன்படுத்த முடியாது.

வாட்ஸ் அப் -ன் இணையதள சேவையை செயல்படுத்தும் வழிமுறைகள்:

1, முதலில், அண்டிரொய்டு பிளே ஸ்டோரில் இருந்து வாட்ஸ் அப் செயலியை புதிதாக மேம்படுத்திக்கொள்ள வேண்டும். விண்டோஸ் மற்றும் பிளாக்பெர்ரி பயனர்கள், அதற்குத்தகுந்த ஸ்டோர்களைப் பயன்படுத்தலாம்.

2, கணினியில்க்ரோம் உலாவியைதிறந்து அதில் https://web.whatsapp.com/ என்ற வலைதளத்திற்கு செல்ல வேண்டும். அதில் இருக்கும் QR (Quick Response) கோடை குறித்துக் கொள்ள வேண்டும்.

3, தற்போது திறன்பேசியில் உள்ள வாட்ஸ் அப் செயலியைதிறந்து, அதில் Whatsapp Web தேர்வை தேர்வுசெய்தால், QR கோடிற்கான ஸ்கேனர் திறக்கும். இந்த Whatsapp Web தேர்வை எப்படி திறப்பது என்பது https://web.whatsapp.com/  பக்கத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கும்.

4, திறன்பேசியில் திறந்திருக்கும் ஸ்கேனர் மூலம், க்ரோம் உலாவியில் காட்டப்பட்டிருக்கும் QR கோடை ஸ்கேன் செய்தால், நீங்கள் திறன்பேசியில் பயன்படுத்தும் வாட்ஸ் அப் இனி உங்கள் கணினியிலும் இருக்கும். இதில் குறிப்பிடத்தக்க ஒன்று திறன்பேசிகளில் உள்ள Notification வசதி கணினியில் இருக்கும்.

எனினும், இந்த புதிய வாட்ஸ் அப் வசதியை ஆப்பிள் நிறுவனம் ஏற்றுக் கொள்ளாததால், ஐபோன் பயனீட்டாளர்கள் இந்த வசதியை பயன்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.