Home இந்தியா ஒபாமாவிற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் – மோடி

ஒபாமாவிற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் – மோடி

482
0
SHARE
Ad

obama modiபுதுடெல்லி, ஜனவரி 23 – நமது குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் பங்கேற்பதால் இந்த மாதத்தின் ‘மன் கி பாத்’ எனும் வானொலி நிகழ்ச்சி மிகவும் சிறப்பானது.

நமது எண்ணங்களை அவருடன் நான் பகிர்ந்து கொள்வேன். ஜனவரி 27-ஆம் தேதி அவருடன் ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

ஒபாமாவுடனான ‘மன் கி பாத்’ நிகழ்ச்சி உங்களின் கேள்விகள் இல்லாமல் முழுமை பெறாது. அதனால் உங்களின் கேள்விகளை 25-ஆம் தேதிக்குள் அனுப்புங்கள்.

#TamilSchoolmychoice

வெளிப்படையான விவாத நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக எங்கள் அரசு உங்களுக்கு அளித்துள்ள வாய்ப்பை பயன்படுத்தி கேள்விகளை அனுப்புங்கள்.

ஒபாமா-மோடி பங்கேற்கும் இந்த மறக்க முடியாத ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சியின் மூலம் இந்தியா-அமெரிக்கா உறவு தனித்துவம் பெறும் என பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.