Home கலை உலகம் ரசிகர்களுக்கும் எனக்கும் உள்ள பந்தத்தை பலப்படுத்துவேன் – சிம்பு!

ரசிகர்களுக்கும் எனக்கும் உள்ள பந்தத்தை பலப்படுத்துவேன் – சிம்பு!

582
0
SHARE
Ad

simbuசென்னை, ஜனவரி 24 – பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு , நயன்தாரா, ஆண்ட்ரியா சூரி நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘இது நம்ம ஆளு’. படம் கோடைகால விடுமுறை சிறப்பாக வெளியாக உள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளன.

படத்தின் முன்னோட்டம் கடந்த ஜனவரி 15-ஆம் தேதி பொங்கல் தினத்தில் வெளியானது. இதுவரை படத்தின் முன்னோட்டத்தை 17 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

முன்னோட்டத்தில் சூரியின் நகைச்சுவை வசனங்கள், காதல், பெண்கள் குறித்து சிம்பு பேசும் வசனங்களும் இளைஞர்களை சற்றே கவர்ந்திழுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

இந்நிலையில் மக்கள் தனக்களித்த ஆதரவால் மகிழ்ச்சியடைந்துள்ளார் சிம்பு. இது குறித்து அவர் கூறியுள்ளதாவது, “என் படத்துக்கு ரசிகர்கள் இடையே கிடைத்து உள்ள இந்த வரவேற்பு மகத்தானது. என் ரசிகர்களுக்கு மட்டுமின்றி எல்லோருக்கும் பிடித்த வகையில் இருப்பது எனக்கு மிக்கவும் மகிழ்ச்சி”.

“இடைவெளிக்கு பிறகும் எனக்கும்  என் படங்களுக்கும் இந்த அளவுக்கு வரவேற்ப்பு கொடுத்து இருப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. எனக்கும் அவர்களுக்கும் உள்ள பந்தத்தை  பலப்படுத்தி அவர்களுக்காகவே  மேலும்  நல்ல படங்கள் தர வேண்டும் என உறுதியாக இருக்கிறேன”’ என்றார் சிம்பு.