Home உலகம் பாகிஸ்தானில் ஜமாத் உத் தவா தடை உறுதியாகவில்லை – அமெரிக்கா!

பாகிஸ்தானில் ஜமாத் உத் தவா தடை உறுதியாகவில்லை – அமெரிக்கா!

476
0
SHARE
Ad

hafiz-saeed11-600வாஷிங்டன், ஜனவரி 24 – பாகிஸ்தான் அரசு ஜமாத் உத் தவா உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளை தடை செய்ததாக அறிவித்துள்ளது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

பெஷாவர் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் அரசு, தீவிரவாத இயக்கங்கள் மீது கடும் நடவடிக்கைகளை எடுத்துவருவது போல் தோற்றத்தை ஏற்படுத்தினாலும், அந்நாட்டு அரசுக்கு ஆதரவாக செயல்படும் தீவிரவாத இயக்கங்களை கண்டும் காணாதது போல் செயல்பட்டு வந்தது.

இந்தியாவில் 2008-ம் ஆண்டு நடத்தப்பட்ட மும்பை தாக்குதலுக்கு காரணமாக இருந்த ஹபீஸ் சயீத்தின் தீவிரவாத இயக்கமான ஜமாத் உத் தவாவிற்கு பாகிஸ்தான் அரசு எந்த தடையும் விதிக்கவில்லை.

#TamilSchoolmychoice

லாகூரில் சயீத் தங்கள் இயக்க மாநாடு நடத்த பாகிஸ்தான் சிறப்பு இரயிலை ஏற்பாடு செய்ததாகவும் இந்திய தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

இந்நிலையில், தீவிரவாத இயக்கங்களை முழுவதுமாக தடை செய்ய வேண்டும் என அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் பாகிஸ்தானை தொடர்ந்து வற்புறுத்தி வந்தன.

இந்நிலையில், ஜமாத் உத் தவா அமைப்பை தடை செய்வதாக பாகிஸ்தான் அரசு சமீபத்தில் அறிவித்தது. மேலும், அமெரிக்க அரசு செய்தித் தொடர்பாளர் ஜன் பசாகி இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“தீவிரவாத அமைப்புகளை தடைசெய்வதற்கான நடவடிக்கைகளை பாகிஸ்தான் அரசு செய்து வருவதை நாங்கள் அங்கீகரிக்கிறோம், ஆனால் குறிப்பட்ட இந்த நடவடிக்கை தொடர்பாக உறுதிப்படுத்தப்படவில்லை” என்று கூறியுள்ளார்.

மேலும் பசாகி கூறுகையில், “பாகிஸ்தான் அரசு தங்கள் நாட்டு நலனில் அக்கறையுடன் செயல்படுவதற்கான நேரம் இது. அரசை ஆதரிக்கும் தீவிரவாத குழுக்கள், ஆதரிக்காத குழுக்கள் என்று வேறுபாடு காட்டாமல், தீவிரவாத குழுக்களை மொத்தமாக பாகிஸ்தான் அரசு வேரறுக்கும் என நாங்கள் நம்புகிறோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.