Home நாடு 2 நாட்கள் அதிகாரப்பூர்வ பயணமாக லண்டன் சென்றார் நஜிப்!

2 நாட்கள் அதிகாரப்பூர்வ பயணமாக லண்டன் சென்றார் நஜிப்!

501
0
SHARE
Ad

????????????????????லண்டன், ஜனவரி 26 – இரண்டு நாட்கள் அதிகாரப்பூர்வ அலுவல் பயணமாக நேற்று ஞாயிற்றுக்கிழமை லண்டன் சென்றடைந்தார் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்.

பிரதமரும் அவரது மனைவியும் பயணம் மேற்கொண்ட விமானம் லுடன் விமான நிலையத்தில் உள்ளூர் நேரப்படி அதிகாலை 3.15 மணியளவில் (மலேசிய நேரம் காலை 11.15 மணி) தரை இறங்கியது.

இதையடுத்து இங்கிலாந்துக்கான மலேசிய தூதர் டத்தோ அகமட் ரசிடி ஹசிசி, பிரதமர் தம்பதியரை வரவேற்றார்.

#TamilSchoolmychoice

கடந்த வெள்ளிக்கிழமை காலமான சவுதி அரேபிய மன்னர் அப்துல்லாவின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்ட பிரதமர் நஜிப், பின்னர் ரியாத் நகரிலிருந்து லண்டன் புறப்பட்டுச் சென்றார்.

இந்த இரண்டு நாள் பயணத்தின் போது வோர்செஸ்டர்ஷைரில் உள்ள மால்வெர்ன் கல்லூரியைப் பார்வையிடும் பிரதமர் நஜிப், அங்கு தனது தந்தையார் பெயரில் அமைந்துள்ள துன் ரசாக் அறிவியல் மையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் இன்று திங்கட்கிழமை பங்கேற்கிறார்.

இது கடந்த 1968 முதல் 1971 வரை நஜிப் படித்த கல்லூரி ஆகும். தற்போது இங்கிலாந்தின் முன்னணி கல்வி மையமாகத் திகழ்கிறது.