பொருளாதாரம், வர்த்தகம், பாதுகாப்பு, தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளும் ஒத்துழைத்து செயல்படுவது தொடர்பாக அப்போது அவர்கள் ஆலோசனை நடத்தினார்கள்.
இந்த பேச்சுவார்த்தையின் போது, இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே சில முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. அதில் ஒன்று, அமெரிக்க தொழில்நுட்ப உதவியுடன் இந்தியாவில் ராணுவ தளவாடங்கள் தயாரிப்பது.
ஜெட் என்ஜின் தயாரிப்பு தொடர்பாக இரு நாடுகளும் சேர்ந்து கூட்டுப்பணிக்குழு அமைக்க ஒப்புக்கொள்ளப்பட்டு இருக்கிறது. கடலோர பாதுகாப்பில் இரு நாடுகளும் ஒத்துழைத்து செயல்படவும் தீர்மானிக்கப்பட்டு இருக்கிறது.
பேச்சுவார்த்தையின் போது விசா தொடர்பான நடைமுறைகளை எளிமைப்படுத்த அமெரிக்க தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.