Home உலகம் கடும் பனிப்பொழிவு: அமெரிக்கா, கனடாவில் 5000 விமான சேவைகள் இரத்து!

கடும் பனிப்பொழிவு: அமெரிக்கா, கனடாவில் 5000 விமான சேவைகள் இரத்து!

671
0
SHARE
Ad

America

டோரன்டோ, ஜனவரி 27 – கடும் பனிப்பொழிவு காரணமாக வடகிழக்கு அமெரிக்கா மற்றும் கனடாவின் சில பகுதிகளில் சுமார் 5000 விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு கடும் பனிப் பொழிவு ஏற்படும் என்று அமெரிக்காவின் தேசிய வானிலை சேவைகள் மையம் அறிவித்துள்ளதை அடுத்து, விமான சேவைகள் இரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

#TamilSchoolmychoice

அப்பகுதிகளில் குளிர்காலப் புயல் காரணமாக 90 செ.மீ அளவுக்கு பனிப் பொழிவு ஏற்படக் கூடும் என்று வானியல் வல்லுநர்கள் அறிவித்துள்ளனர்.