Home நாடு மாநிலத் தலைவர் பதவி நீக்கம்: சரவணன் இன்று பத்திரிகையாளர்களை சந்திக்கிறார்!

மாநிலத் தலைவர் பதவி நீக்கம்: சரவணன் இன்று பத்திரிகையாளர்களை சந்திக்கிறார்!

526
0
SHARE
Ad

M.Saravananகோலாலம்பூர், ஜனவரி 28 – கூட்டரசுப் பிரதேச மஇகா மாநிலத் தலைவர் பதவியில் இருந்து தான் நீக்கப் பட்டது குறித்து விளக்கமளிக்க மஇகா தேசிய உதவித் தலைவர் டத்தோ சரவணன், இன்று பிற்பகல் 1 மணியளவில், கட்சித் தலைமையகத்தில் பத்திரிகையாளர் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார்.

சரவணன் ஆதரவாளர்கள் பலர் இக்கூட்டத்தில் ஒன்று திரள்வார்கள் என்றும் மஇகா வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த அவசரக் கூட்டத்தில், தனது அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் குறித்த அறிவிப்புகளை சரவணன் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

#TamilSchoolmychoice

இந்நிலையில், இக்கூட்டம் தொடர்பாக, மஇகா தலைமையகத்தில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.