கோலாலம்பூர், ஜனவரி 28 – மஇகா தலைமையகத்தில் பாதுகாவலர்கள் என்ற பெயரில் குண்டர்கள் போல் நின்று கொண்டு சிலர் தன்னை அனுமதிக்க மறுத்தனர் என்று அக்கட்சியின் தேசிய மகளிர் பிரிவுத் தலைவி மோகனா முனியாண்டி தெரிவித்தார்.
இது குறித்து இன்று மதியம் மஇகா தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மோகனா, “மஇகா தேசிய மகளிர் பிரிவுத் தலைவியான நான் என் அலுவலகத்திற்கு செல்ல இயலாமல் தடுத்து நிறுத்தப்பட்டேன். சொந்த கட்சி உறுப்பினர்களுக்கே இந்த அலுவலகத்தில் பாதுகாப்பு இல்லாமல் போய்விட்டது. அவர்கள் யார் என்னைத் தடுத்து நிறுத்துவதற்கு?” என்று கேள்வி எழுப்பினார்.
200,000 மேற்பட்ட இந்திய பெண் உறுப்பினர்களை கொண்ட மஇகா கட்சியில், இப்படி ஒரு சம்பவம் இன்று நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என்றும் மோகனா குறிப்பிட்டார்.