Home நாடு மஇகா விவகாரத்தில் உள்துறை அமைச்சு தலையிடுகிறது! தீர்வு காண்பதாக சாஹிட் நம்பிக்கை!

மஇகா விவகாரத்தில் உள்துறை அமைச்சு தலையிடுகிறது! தீர்வு காண்பதாக சாஹிட் நம்பிக்கை!

559
0
SHARE
Ad

zahidபுத்ராஜெயா, ஜனவரி 29 – மஇகா பிரச்சனைகளுக்குத் தீர்வு காண மஇகா தலைவர்களையும், ஆர்ஓஎஸ் அதிகாரிகளையும் அடுத்தவாரம் சந்தித்துப் பேசவுள்ளது உள்துறை அமைச்சகம்.

இது குறித்து உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் சாஹிட் ஹமீடி இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், “அடுத்த வாரம் மஇகா தலைவர், துணைத்தலைவர் மற்றும் ஆர்ஓஎஸ் அதிகாரிகளை சந்திக்கவுள்ளேன். இச்சந்திப்பின் முடிவை  பின்னர் மஇகா தலைவரும், துணைத்தலைவரும் அறிவிப்பாளர்கள்” என்று தெரிவித்தார்.

அதுவரையில், மஇகா உறுப்பினர்கள் அமைதி காக்க வேண்டும் என்றும், கட்சி மற்றும் சங்கங்கள் சட்டப்பிரிவு 1966 -ன் கீழ் ஆர்ஓஎஸ் அதன் கடமையைச் செய்யும் என்றும் சாஹிட் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice