Home நாடு மஇகாவை வழிநடத்துவதற்கான தகுதி பழனிவேலுக்கு இல்லை – சிவராஜ்

மஇகாவை வழிநடத்துவதற்கான தகுதி பழனிவேலுக்கு இல்லை – சிவராஜ்

572
0
SHARE
Ad

tmi-sivarraajh-nov26_300_274_100கோலாலம்பூர், ஜனவரி 30 – மஇகாவை வழிநடத்துவதற்கான தகுதி பழனிவேலுக்கு இல்லை என்றும், அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும் மஇகா இளைஞர் பிரிவு தலைவர் சி.சிவராஜ் கூறியுள்ளார்.

கட்சியின் தலைமையகத்தில் புதன்கிழமையன்று நடந்த நிகழ்வுகளால் தாம் பெரிதும் வருத்தமும் கவலையும் அடைந்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

“உதவித் தலைவர் டத்தோ சரவணன், மகளிர் பிரிவு தலைவி மோகனா ஆகிய இருவரும் மஇகா தலைமையகத்திற்குள் நுழைவதை சிலர் தடுத்து நிறுத்தியதாக அறிந்தேன்”.

#TamilSchoolmychoice

“தேசியத் தலைவரும் அவரது தலைமைச் செயலாளரும் (குமார் அம்மான்) சில பாதுகாவலர்களைப் பணிக்கு அமர்த்தி இவர்களைத் தடுத்ததாக பிறகு தெரியவந்தது,” என்று மஇகா தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது குற்றம்சாட்டினார் சிவராஜ்.

அப்போது அங்கு கூடியிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட அவரது ஆதரவாளர்கள் கரவொலி எழுப்பினர். “கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ளோம். ஆனால் தேசியத் தலைவரை தொடர்பு கொள்வது மிகக் கடினமாக உள்ளது.”

“இன்று காலை மாற்றுத் திறனாளி ஒருவர் தலைமையகத்திற்கு வந்தார். ஆனால் அவருக்கு என்ன தேவை என்பதைக் கேட்டறிவதற்குள்ளாகவே அவர் விரட்டியடிக்கப்பட்டார். இத்தகைய நிலை ஏற்புடையதல்ல”.

“இது மக்களுக்கான கட்சி. எனவே தேடி வரும் மக்களை உள்ளே நுழைய விடாமல் கதவுகளை மூடுவது என்பது அறிவற்ற செயல் என்பதுடன் எந்தவொரு கட்சியின் கொள்கைகளுக்கும் எதிரானது,” என்றார் சிவராஜ்.

இதையடுத்து மஇகா தலைமையகத்தை கட்சியின் இளைஞர் பிரிவு தன் பொறுப்பில் எடுத்துக் கொள்ளும் என்றும் இதன்வழி கட்சியினர் மற்றும் பொது மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றும் அவர் அறிவித்தார்.