ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு தொடர்பான விசாரணை கர்நாடக உயர்நீதி மன்றத்தில் நடைபெற்று வருகிறது. 16-வது நாளாக நேற்று, சசிகலா தரப்பு இறுதி வாதம் முன் வைக்கப்பட்டது.
இந்த வழக்கில், ஜெயலலிதாவின் பினாமிகளாக குற்றம்சாட்டப்பட்ட மற்ற மூன்று பேரும் சித்தரிக்கப்பட்டிருப்பதாக சசிகலா தரப்பில் வாதிடப்பட்டது.
இதற்கு ஆட்சேபனை தெரிவித்த அரசுத் தரப்பு வழக்கறிஞரான பவானி சிங்கின் உதவி வழக்கறிஞர், சசிகலா உள்ளிட்ட 3 பேர் ஜெயலலிதாவின் பினாமிகள் என்பது நிரூபிக்கப்பட்டதாகக் கூறி மூன்று சாட்சியங்களை சுட்டிக்காட்டினார்.
மேலும், இதுதொடர்பான முழுமையான தகவல்களை தெரிந்து கொள்ள விசாரணை அதிகாரி நல்லம நாயுடுவை நேரில் ஆஜராகும்படியும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.