Home கலை உலகம் சோ.ராமசாமி உடல் நிலையில் முன்னேற்றம்!

சோ.ராமசாமி உடல் நிலையில் முன்னேற்றம்!

585
0
SHARE
Ad

cho ramasuwamiசென்னை, ஜனவரி 31 – மூத்த பத்திரிகையாளர், நடிகர் சோ ராமசாமி உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சென்னை ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்தவர் சோ ராமசாமி (79).

‘துக்ளக்’ இதழ் ஆசிரியர். பத்திரிகையாளர், நடிகர், அரசியல் விமர்சகர் என, பன்முகத் திறமை கொண்டவர். இவர் சிரிது நாட்களுக்கு முன்னால் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நுரையீரலில் சளி அடைத்து, மூச்சுத் திணறல் ஏற்பட்டதையடுத்து அவருக்கு மதுத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், தற்போது அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.