Home உலகம் விமான விபத்துகளை தவிர்க்க புதிய நடைமுறைகள் – ஐசிஏஓ முடிவு!

விமான விபத்துகளை தவிர்க்க புதிய நடைமுறைகள் – ஐசிஏஓ முடிவு!

594
0
SHARE
Ad

icao-splash2மாண்ட்ரியல், பிப்ரவரி 2 – கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் 8-ம் தேதி முதல், விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளில் பெரும்பாலானோருக்கு விமானப் பயணம் சற்றே பதற்றம் நிறைந்ததாகவே இருக்கும். காரணம், மலேசியன் ஏர்லைன்சிற்கு சொந்தமான எம்எச் 370 விமானம் மாயமானது தான்.

239  பயணிகளுடன் மாயமான அந்த விமானம் என்ன ஆனது என்று இது வரை எந்தவொரு உறுதியான தகவல்களும் இல்லை. அதன் தொடர்ச்சியாக, எம்எச் 17 விமானம் உக்ரைன் தீவிரவாதிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதும், சமீபத்தில் 162 பயணிகளுடன் கடலில் விழுந்து விபத்துக்குள்ளான ஏர் ஏசியா விமானமும் மக்களுக்கு மட்டுமல்லாமல், உலக நாடுகளுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.

தொடர்ந்து வரும் இது போன்ற விமான விபத்துகளை தடுக்க, இந்த ஆண்டு இறுதிக்குள் புதிய கண்காணிப்பு விதிகளை நடைமுறைப்படுத்த இருப்பதாக அனைத்துலக சிவில் விமான போக்குவரத்து அமைப்பு (ஐ.சி.ஏ.ஓ.) அறிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

இதன் முதல் கட்டமாக கனடாவில் உள்ள மாண்ட்ரியலில், கடந்த திங்கள் முதல் வியாழக்கிழமை வரை ஐசிஏஓ-ன் பல்வேறு உறுப்பினர்கள் பங்கேற்ற கூட்டம் ஒன்று நடைபெற்றது.

சுமார் 191 உறுப்பினர்கள் பங்கேற்ற இந்த கூட்டத்தில், விமான விபத்துகளை தவிர்ப்பதற்கான நடைமுறைகளின் இறுதி வடிவம், இன்னும் 6 மாதங்களில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

CalculationCompilation_15குறிப்பிட்ட அந்த நடைமுறைகளின் படி, இதுவரை ரேடார் மட்டுமே விமானங்களை கண்காணித்து வந்த நிலையில், விமானத்தை இயக்கும் விமான சேவை நிறுவனமும் இனி தங்கள் விமானத்தை 15 நிமிடங்களுக்கு ஒருமுறை கண்காணிக்கும் படியான அமைப்பு உருவாக்கப்பட இருக்கிறது.

மேலும் விமானம், தான் பயணிக்க வேண்டிய திசையிலிருந்து மாறும் பொழுது ஒவ்வொரு நிமிடத்திற்கு ஒருமுறையும் விமானத்தில்  இருந்து சமிக்ஞைகள் வரும் படியான அமைப்பு உருவாக்கப்பட இருக்கிறது.

இதன் மூலம் விமானம் ஏதேனும் விபத்துக்குள்ளானால், மீட்புக் குழு குறிப்பிட்ட அந்த பகுதியை அடைவது எளிதானதாக இருக்கும்.

இந்த விதிகளில் மிக முக்கியமானதாக கூறப்படுவது, விமானங்கள் ஒருவேளை கடலில் விழுந்தால், அதன் கருப்புப் பெட்டி கடலில் மூழ்காமல் மிதக்கும் வகையில் புதிய வழிவகை செய்யப்பட இருக்கின்றது.

இதற்கு முக்கியக் காரணம், சமீபத்தில் கடலில் விழுந்த ஏர் ஏசியா விமானத்தின் கறுப்புப் பெட்டி பெரும் போராட்டங்களுக்கு இடையே தான் மீட்கப்பட்டது.

இதுபோன்ற புதிய விதிகள் விமான பயணத்தை பாதுகாப்பானதாக மாற்றும் என உலக நாடுகள் நம்பிக்கை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.