Home நாடு பிரதமரின் அர்த்தமுள்ள வருகை – நிக் அப்து

பிரதமரின் அர்த்தமுள்ள வருகை – நிக் அப்து

701
0
SHARE
Ad

கோத்தபாரு, பிப்ரவரி 2 – மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பாஸ் சமயத் தலைவர் டத்தோ நிக் அப்துல் அஜிஸ் உடல்நிலை குறித்து பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கடந்த வியாழக்கிழமை நேரில் சென்று நலம் விசாரித்தார்.

பிரதமரின் இந்த வருகையானது தங்களின் குடும்பத்தாரைப் பொறுத்தவரை மிகவும் அர்த்தமுள்ள ஒன்று என்று நிக் அஜிசின் புதல்வர் நிக் அப்து தெரிவித்துள்ளார்.

1907940_1078319938861009_7534602209820030141_n

#TamilSchoolmychoice

(மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிக் அஜிஸ், அவருக்கு அருகில் நிக் அப்து- படம் நிக் அப்து பேஸ்புக்)

“எனது தந்தையைக் காண வந்த பிரதமருக்கு நன்றி. சிறிது நேரமே இந்த சந்திப்பு நீடித்தது என்றாலும், இச்சமயம் எனது தந்தை களைப்பாக இருந்தாலும் கூட, எங்கள் குடும்பத்தாருக்கும் எனக்கும் இது மிக அர்த்தமுள்ள சந்திப்பாகும். மலேசியர்களுக்கு என் நன்றி,” என்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நிக் அப்து.

கிளந்தான் மாநிலத்திற்கு வியாழக்கிழமையன்று ஒரு நாள் பயணம் மேற்கொண்ட பிரதமர் நஜிப், நிக் அஜிஸ் உடல்நிலை குறித்து அவர் சிகிச்சை பெறும் மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரித்தார். சுமார் 10 நிமிடங்கள் இந்தச் சந்திப்பு நீடித்தது.

தற்போது 84 வயதான நிக் அஜிசின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படுவதாக அவரது மகன் தெரிவித்துள்ளார்.